சேலம் மண்டலத்தில் விதிமுறை மீறி வாகனங்கள் இயக்கம்
ரூ.53 லட்சம் அபராதம் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை;
சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விதிமுறை மீறி வாகனங்கள் இயக்குபவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது விதிகளை மீறி இயக்கிய, லாரி, சரக்கு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 1,419 வாகனங்களை பிடித்து வாகன உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.53 லட்சம் அபராதம் விதித்தனர்.