ஏற்காடு போலீஸ் நிலையத்தில் ஆய்வு

எஸ்.பி கவுதம் கோயல் ஆய்வு;

Update: 2025-07-21 09:25 GMT
ஏற்காடு போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், துப்பாக்கிகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து சூப்பிரண்டு கவுதம் கோயல் நிருபர்களிடம் கூறும்போது, ஏற்காட்டில் போக்குவரத்தை சீர்செய்யும் வகையில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் எந்தவித மதக்கலவரமோ, பெரிய அளவில் வன்முறை சம்பவங்களும் நடப்பதில்லை. மேலும் அங்கு மக்கள் தொகை குறைவாக உள்ளதால் அதற்கு ஏற்றார் போல் தான் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள், என்றார். இந்த ஆய்வின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி, சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் ஆண்டனி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Similar News