விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில்
மருத்துவ அறிவியல் சர்வதேச கருத்தரங்கு;
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில் அடிப்படை மருத்துவ அறிவியல் சார்ந்த சர்வதேச அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இதில், கேரளா அல் அசார் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரிபு சாம் ஸ்டீபன், லண்டன் சுவான்ஷி பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி பேராசிரியை கற்பகம் கிருஷ்ணமூர்த்தி, எத்தியோப்பியா டேம்பி டோலு பல்கலைக்கழக இணை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் சிலம்பரசி, சென்னை ஊழியர்களின் மாநில காப்பீட்டு கழக மருத்துவ கல்லூரியின் இணை பேராசிரியர் சதீஷ் மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த தபுக் பல்கலைக்கழக இணை பேராசிரியர் பழனிசாமி அமிர்தலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அடிப்படை மருத்துவ அறிவியலான உடற்கூறியல், உடலியல், உயிர்வேதியியல், மருந்தியல், நுண்ணுயிரியல், நோயியல் சார்ந்த பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினர். இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாணவர்களுக்கு படவிளக்க காட்சி போட்டியும், வினா-விடை போட்டியும் நடத்தப்பட்டது. முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அடிப்படை மருத்துவ அறிவியல் பிரிவு இணை பேராசிரியை அனிதா, சதீஷ்குமார் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் செய்திருந்தனர்.