மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செல்போன்
கலெக்டர் பிருந்தாதேவி வழங்கினார்;
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்பட மொத்தம் 491 மனுக்களை பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் காது, பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான செயலியுடன் கூடிய பிரத்யேக செல்போன்களை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.