வாழப்பாடியில் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிள் திருட்டு
கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீஸ் விசாரணை;
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது46). இவர் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் பகுதியில் பெட்ரோல் பங்கில் கேஷியராக உள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் கடந்த சனிக்கிழமை இரவு திருட்டு போனது. இதுதொடர்பாக வாழப்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்த போது, ஒருவர் போலி சாவி மூலம் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.