சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் பேட்டை கூட்செட் முன் நடந்தது;
சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் கூட்ஸ்செட் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வெங்கடபதி கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் திருச்சியில் உள்ள பழைய பேப்பர் கடைகளில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த 45 சுமை தூக்கும் தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியதை கண்டித்தும், அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி, ஊதிய உயர்வு வழங்கக்கோரியும், பணி பாதுகாப்பு வழங்கிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்டத்தலைவர் ஆறுமுகம், கூட்ஸ்செட் சங்க பொருளாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.