பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மாவட்ட வன அலுவலர் பங்கேற்பு;

Update: 2025-07-23 03:37 GMT
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் வனத்துறை ஆகியவை இணைந்து 4.5 ஏக்கர் பரப்பளவில் 500 மரக்கன்றுகளை நடும் ‘பெரியார் பசுமை வனம்' நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் ராஜ் வரவேற்று பேசினார். துணைவேந்தர் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் சுப்பிரமணி தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறுகையில், மரங்களை நடுதல் என்பது காடுகளை வளர்ப்பதோடு பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவசியமாகிறது என்றும், காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் காடு வளர்ப்பு அவசியமாகிறது என்றார். முடிவில் இணை இயக்குனர் அருள்பாலச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News