சேலம் அருகே வாலிபரை மிரட்டி நகை, பணம் பறிப்பு ஒருவர் கைது
போலீசார் நடவடிக்கை;
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன் என்கிற சுரேஷ் (வயது 20). இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், திடீரென கத்தியை காட்டி சுரேசை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயின், ரூ.1,000, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சுரேசை மிரட்டி நகை, செல்போன், பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்தது, அப்பகுதியில் உள்ள சென்னகிரியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடிய பொருட்கள் மீட்கப்பட்டது.