லஞ்ச வழக்கில் கைதான பொதுப்பணித்துறை அதிகாரி பணி இடைநீக்கம்
அதிகாரிகள் நடவடிக்கை;
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மின் செயற்பொறியாளர் பிரிவில் முதுநிலை வரைவு அதிகாரியாக பணியாற்றியவர் ரவி (வயது 55). இவர் மின் வரைவு அனுமதிக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 22-ந் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் லஞ்ச வழக்கில் கைதான ரவியை பணி இடைநீக்கம் செய்து, சேலம் மாவட்ட பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளர் (கட்டிடம்) தவமணி உத்தரவிட்டு உள்ளார்.