சேலத்தில் கிறிஸ்டல் கட்டுமான பொருட்கள் கண்காட்சி

நாளை நிறைவு பெறுகிறது;

Update: 2025-07-26 03:38 GMT
சேலம் ரத்தினவேல் ஜெயக்குமார் மண்டபத்தில் கிறிஸ்டல் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் 60-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் 70-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் கட்டிட மேஸ்திரி அசோசியேசன் நிர்வாகிகள் துரைசாமி, மந்திரி, செல்வம், கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி நாளை(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.

Similar News