ஓமலூர் வட்டார அளவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

ஓட்டப்பந்தயம் உள்பட பல போட்டிகள் நடந்தன;

Update: 2025-07-26 03:43 GMT
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட மற்றும் மண்டல அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஓமலூர் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி சேலம் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் லாரன்ஸ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்வு செய்து அடுத்த கட்டமாக நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் கோகிலா, உடற்கல்வி ஆசிரியர்கள் அருள், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News