சேலம் அரசு மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி தினம் கடைபிடிப்பு

மாணவிகள் பேரணி;

Update: 2025-07-28 09:35 GMT
சேலம் அரசு மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி தினம் கடைபிடிப்பு. உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பேரணியை மருத்துவ கல்லூரி முதல்வர் தேவி டாக்டர் மீனாள் தொடங்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி, குழந்தைகள் நலப்பிரிவு அருகே நிறைவடைந்தது. இதில் திரளான செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். இதில், கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் பிரச்னைகள், மது அருந்துவதன் தீமைகள், கல்லீரல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்குமார், ஆர்எம்ஓ ஸ்ரீலதா, துறை தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர் பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News