சேலம் ஏற்காடு மலைப்பாதையில் டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-07-29 03:53 GMT
சேலத்தை அடுத்த வீரபாண்டியை சேர்ந்த கதிரவன் (வயது 24). காக்காபாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (22). நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டிற்கு நேற்று சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களை அவர்கள் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் சேலம் நோக்கி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் அவர்கள் 60 அடி பாலம் அருகே வந்தபோது சேலத்தில் இருந்து ஏற்காடு நோக்கி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கதிரவன், நந்தகுமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே கதிரவன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News