சேலத்தில் முஸ்லிம் கல்லறை தோட்டத்தில் அறை கட்ட பா.ஜனதா எதிர்ப்பு

போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு;

Update: 2025-07-29 03:59 GMT
சேலம் திருச்சி மெயின் ரோடு பில்லுக்கடை பஸ் நிறுத்தம் அருகில் முஸ்லிம் கல்லறை தோட்டம் உள்ளது. இந்த இடத்தில் இறுதி சடங்கு செய்யும் நபருக்கு தங்கும் அறை கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளது. இந்த இடம் வருவாய்த்துறையினருக்கு சொந்தமானது என்று பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதனை அறிந்த முஸ்லிம்களும் அங்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் ஹரிசங்கரி, பரவாசுதேவன் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லறை தோட்டத்துக்குள் அறை எதுவும் கட்டப்படவில்லை என்று போலீசார் கூறினர். அதன்பிறகு அங்கிருந்து பா.ஜனதாவினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் பா.ஜனதாவினர் மனு கொடுத்துள்ளனர்.

Similar News