மதுரையில் விழிப்புணர்வு பேரணி
மதுரையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்;
மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று (ஆக.11)மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர், மதுரை மாநகராட்சி மேயர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாநகர காவல் ஆணையர் அவர்களும் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்நிகழ்வில் காவல்துறையினர், வருவாய்துறை அலுவலர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.