தனியார் பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவர்கள் மரியாதை

தனியார் பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவர்கள் மரியாதை;

Update: 2025-09-05 02:15 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் - நெடுங்கள் செல்லும் சாலையில் உள்ள கொட்டாவூர் கிராமத்தில் அசோக் மெஷின் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. போது மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தங்களது குருவான ஆசிரியர்களை வணங்கி அவர்களுக்கு மாணவ-மாணவிகள் இனிப்புகள் வழங்கினர், இதில் பள்ளி தாளாளர்.கே.பி.அருள், தலைவர் கே.பி. அன்பரசு, செயலாளர் பி.இந்துமதி அசோக், நிர்வாக இயக்குனர் எஸ். அபிராமி, நிர்வாக அலுவலர் பி. ராஜேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News