துபாய் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
மதுரையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக சென்னை விமானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது;
மதுரையில் இருந்து இன்று (அக்.27) மதியம் 175 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்ட நிலையில் நடுவானில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்த பின் விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் செய்தவர்கள் வேறு விமானத்தில் துபாய் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.