நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் வர்த்தக அணி மாவட்ட தலைவர் நியமனம்
நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட வர்த்தக அணியின் தலைவராக வில்லாபுரம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.;
நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் வர்த்தக அணியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொறியாளர் ரமேஷ் என்பவரை கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட வர்த்தக அணியின் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் மாநில தலைவருக்கு நன்றி தெரிவித்தார் . மாநகர் மாவட்ட தலைவருக்கு மகாராஜன் பொண்ணாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் இருந்தனர்.