அலங்காநல்லூரில் தூக்கிட்டு பெண் தற்கொலை
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுவலி தாங்க முடியாமல் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி அம்பேத்கர் தெருவில் வசிக்கும் விசிக நிர்வாகியான சிந்தனை வளவனின் மனைவி மாதவி (39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மாதவிக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் மன விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.