உசிலம்பட்டி நகராட்சியில் எம்பி ஆய்வு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி பகுதிகளில் எம்பி ஆய்வு மேற்கொண்டார்;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தேனி எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்து நகர் மன்ற உறுப்பினர்களிடம் மக்களின் கோரிக்கைகளை நேற்று (அக்.27) கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் . பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். உடன் நகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.