திருக்கல்யாண வைபவத்தில் முருகப்பெருமான் காட்சி!
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவத்தில் முருகப்பெருமான் காட்சி அளித்தார்.;
வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவத்தில் முருகப்பெருமான் தங்கக் கிரீடம், வைர மாலை, பவள ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு"முருகா முருகா" என உச்சரித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.