குள்ளம்பட்டி அருகே டூவீலரில் செல்லும் போது தவறி விழுந்த தாயார் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. மகன் மீது வழக்கு பதிவு.

குள்ளம்பட்டி அருகே டூவீலரில் செல்லும் போது தவறி விழுந்த தாயார் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. மகன் மீது வழக்கு பதிவு.;

Update: 2026-01-01 12:15 GMT
குள்ளம்பட்டி அருகே டூவீலரில் செல்லும் போது தவறி விழுந்த தாயார் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. மகன் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஈசநத்தம் அருகே சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம் மனைவி ராமுத்தாய் வயது 52. இவரது மகன் குணசேகரன் வயது 23. கடந்த டிசம்பர் 29ஆம் தேதி காலை 8 மணி அளவில் ஈசநத்தத்திலிருந்து ஆலமரத்துப்பட்டி செல்லும் கிராம சாலையில் அவரது தாயாரை அழைத்துக் கொண்டு குணசேகரன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் குள்ளம்பட்டி ஜெயராம் தோட்டம் அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் பின்னால் அமர்ந்து வந்த அவரது தாயார் தவறி கீழே விழுந்து பின்னந்தலையிலும் வலது காலிலும் பலத்த காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ராமுத்தாயின் மகள் மேனகா வயது 29 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல் துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேசமயம் உயிரிழந்த ராமுத்தாயின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைத்தனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News