கரூர்-புத்தாண்டை முன்னிட்டு 120 அடி உயரம் உள்ள கோவில் ராஜகோபுரத்தில் மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்.

கரூர்-புத்தாண்டை முன்னிட்டு 120 அடி உயரம் உள்ள கோவில் ராஜகோபுரத்தில் மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்.;

Update: 2026-01-01 09:55 GMT
கரூர்-புத்தாண்டை முன்னிட்டு 120 அடி உயரம் உள்ள கோவில் ராஜகோபுரத்தில் மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவாய நம குழு சார்பில் 3ஆம் ஆண்டாக 120 அடி உயரம் கொண்ட ஆலய ராஜகோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள புகழ்ச்சோழர் மண்டபத்தில் மலர் மாலைக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பின்னர் பக்தர்கள் பிரம்மாண்ட மாலையை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் திருக்கரங்களால் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிவாய நம குழு சார்பில் 120 உயர கோபுரத்தில் 190 கிலோ எடை கொண்ட மாலையில் பன்னீர் ரோஸ்,வெள்ளை மஞ்சள் செவ்வந்தி,விரிச்சி,மாசி பச்சை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் மலர் மாலைகளாக கோர்க்கப்பட்டு கோபுரத்தில் அணிவிக்கும் நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்ற கோஷத்துடன் விழாவை சிறப்பித்தனர்.

Similar News