வாய்க்கால் கரை ஆக்கிரமித்த தனியார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் அருகே வாய்க்கால் கரை ஆக்கிரமித்த தனியார் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2026-01-23 15:35 GMT
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில், மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் கரையில், அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒரூவர் ஆக்கிரமிப்பு செய்து ஸ்லாப் இருக்கை, தொட்டி ஆகியன கட்டியுள்ளார். இதனை கண்டு கொள்ளாமல் விட்டால், அப்பகுதியை சேர்ந்த ஒவ்வொருவரும் இது போல் கட்டுமானம் நிறுவ தொடங்கி விடுவார்கள். வாய்க்கால் கரையில் போக்குவரத்து இடையூறு உள்ளிட்ட பல பிரச்சனைகள் உருவாகும். இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, இவர் கட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News