அரசின் வருவாய்துறை அதிகாரிகளுக்கு எதிராக திருச்செங்கோட்டில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு புகார்களை எழுப்பிய விவசாயிகள் பரபரப்பு
விவசாயிகளுக்கு அரசு அதிகாரிகள் எந்த ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை, தவறான தகவல்களை கொடுக்கின்ற அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது, விவசாயிகள்வட்டி இல்லா கடன் பெற கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றுகள் கேட்டால் பணம் தருபவர்களுக்கு மட்டுமே தருகிறார்கள்விவசாயிகள் பரபரப்பு புகார்;
திருச்செங்கோட்டில் நடந்த தமிழ்நாடு அரசின் உழவர் நலத்துறை சார்பில் திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறைதீர்கூட்டம் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு முருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் அருளப்பன்,இன்ஸ்பெக்டர் ஆப் சர்வேயர் சரவணன்,வேளாண்மை துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் உள்ளிட்ட வருவாய்த்துறை,நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசியவிவசாயி பூபாலன் என்பவர்எங்கள் பகுதியில் பன்றி பண்ணை இருப்பது குறித்து பலமுறை புகார் அளித்தோம். மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தோம் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளித்த அதிகாரிகள்500 மீட்டர் தொலைவுக்குள் பன்றி பண்னை இருக்கக் கூடாது குடியிருப்பிருக்கும் பகுதிக்குள்பன்றி பண்ணைகள் கூடாது என்று சட்டம் இருந்தும்பன்றி பண்ணை ஊருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளனர்.இதனை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் தவறான தகவல் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி பூபாலன்நாங்கள் ஒரு தகவல் கேட்டால் வேறொரு தகவலை கொடுத்து திசை திருப்பும் வேலையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம் இவ்வாறு தகவல் கொடுத்த அந்த இரண்டு அதிகாரிகள் யார் என எங்களுக்கு கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகும் உரிய தகவல்களை தராதஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்குட்டி மேய்க்கம் பட்டியைச் சேர்ந்த விவசாயி கருப்பண்ணன் என்பவர்100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அமர்த்திக் கொள்ளலாம் என கூறுகிறீர்களே தவிர நடவடிக்கை எடுப்பதில்லை எனவே அவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய அனுமதியை பெற்று தர வேண்டும்குமாரபாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பேசும்போது வாய்க்கால் பாசனம் உள்ள பகுதிகளை என சான்றிதழ் தரும் கிராம நிர்வாக அலுவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் பாசன விவசாயிகள் பட்டியில்லா கடன் பெற்று அறுவடை முடித்தவுடன் திருப்பி செலுத்தி வருகிறார்கள் அவ்வாறு கடன் கேட்க கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் தேவைப்படுகிறது இதனை வாங்க சென்றால்கூட்டு பட்டாவுக்கு போட முடியாது என கூறிவிட்டு பணம் கொடுப்பவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து இதுவரை 50 பேருக்கு மேல்தல ஆயிரம் வசூலித்துள்ள கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் என்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் தரிசு நிலம் என்பது விவசாயமே செய்ய முடியாமல் தண்ணீர் வசதி இல்லாமல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழையும் இல்லாமல் இருந்து காய்ந்து கிடக்கும் பூமியை தான் தரிசு என சான்று வழங்க வேண்டும் ஆனால்வாய்க்கால் பாசனம் உள்ள பகுதியில் பிளாட் போட்டு விற்பவர்களுக்கு ஏதுவாக தரிசு என சான்றிதழ் வழங்கியுள்ள கிராம நிர்வாக அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரிங் ரோடு பணிகள் முடிவடையாமல் இருக்க இரண்டு விவசாயிகள் தான் காரணம் எனக் கூறி வருகிறார்கள். ஆனால் எனது நிலத்தில் உள்ள செம்மரம் உள்ளிட்ட மரங்களுக்கு இழப்பீடு தராமல் எனது நிலத்தை ரோடு போட அனுமதிக்க முடியாது என நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன் எந்த மரமாக இருந்தாலும் வாழை மரமாக இருந்தால் கூட இழப்பீடு வழங்க வேண்டும் என நிலையில் செம்மரம் வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் வரவில்லை எனக் கூறி இழப்பீடு தராததால் ரிங் ரோடு பணி முடிவடையாமல் உள்ளது உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்கி ரிங் ரோடு பணியை முடிக்க வேண்டும்.நீர்நிலை புறம்போக்குகள் அரசு புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு கொடுத்தால் அதற்கு பதில் அளிக்கும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்தி இருப்பதாகவும் உரிய முறையில் விசாரணை நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் அவ்வாறு நேற்று இருந்தால் இனிமேல் இந்த போன்ற கூட்டங்களில் நான் கலந்து கொள்வதை விட்டுவிடுகிறேன் என விவசாயி ஒருவர் காட்டமாக தெரிவித்தார் பிளாட் போட்டு விற்பவர்களுக்கு தனி சலுகை காட்டும் வருவாய் துறை ஒரு சிறு பாலம் சொந்த செலவில் கட்டிக் கொள்ள அனுமதி தரம் இருக்கிறார்கள் அரசுக்கு வருவாய் என கூறுகிறார்கள்விவசாயிகள் குற்றம் சாட்டினர் தொடர்ந்து கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த நடேசன் என்கிற விவசாயி திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் எந்த விவரம் கேட்டாலும் இல்லை தொலைந்து விட்டது என கூறுகிறார்கள் எவ்வாறு அப்படி தொலைந்து போகும் அல்லது திருடியவர்கள் யார் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்து எல்லாம் கேட்டால் எந்த தகவலும் சொல்வதில்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டாலும் வேறு நேரடியாக கேட்டாலும் எந்த தகவலும் கிடைப்பதில்லை என விவசாயிகள் சரமாரியாக குற்றம் சாட்டினார்கள்இதனால் இன்றைய விவசாயிகள் குறைதீன் கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.