ஊத்தங்கரையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். ஊத்தங்கரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு ஒன்றிய தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சுஜாதா,செயலாளர் பழனியம்மாள், பர்வின்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேடு 3, மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைபடுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ.26,000,} உதவியாளர்களுக்கு ரூ.21,000} வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை தொகை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு 5 லட்சம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9,000} வழங்க வேண்டும். 10 ஆண்டு பணிமுடித்த அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அல்லது பத்தாண்டு பணி முடித்தவுடன் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உமா,வேள்விழி, பரிமளா,வள்ளி, சுமதி, கமலவேணி, உள்பட 100 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.