சேலம் அருகே விவசாய தம்பதியை கட்டி போட்டு 10 சவரன் நகை மற்றும் ரூபாய் 40 ஆயிரம் கொள்ளை

போலீசார் விசாரணை;

Update: 2025-07-28 09:33 GMT
சேலம் மாவட்டம் குப்பனூரை அடுத்த கோமாளி வட்டம் பகுதியில் வசித்து வருபவர் பூமாலை. விவசாயம் செய்து வரும் இவர் அரூர் பிரதான சாலையில் உள்ள தனது வீட்டில் வெளியே இரவு உறங்கிக் கொண்டுஇருந்துள்ளார். அப்போது நள்ளிரவு முகமூடி அனிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பூமாலையை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு விட்டு வீட்டுனுள் சென்றுள்ளனர். உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பூமாலையின் மனைவி சின்ன பாப்பாவையும் மிரட்டி அவர் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி உள்ளிட்ட 10 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூபாய் 40 ஆயிரத்தை கொள்ளை அடித்து கார் ஒன்றில் தப்பிச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த பூமாலை மற்றும் அவரது மனைவி சின்ன பாப்பா உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீஸார் சம்பவ இடத்தில் தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூமாலை சின்ன பாப்பா தம்பதியின் மூத்த மகன் வெளிநாட்டில் மருத்துவ படிப்பும் இளைய மகன் நாமக்கல் மாவட்டத்தில் பொறியியல் படித்து வரும் நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News