வாஜ்பாய் 100வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..
வாஜ்பாய் 100வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..
முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வானது நடைபெற்றது. நிகழ்வில் பாஜக மாநில துணைத்தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி டாக்டர் கே.பி ராமலிங்கம் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் 2025 காலண்டர் வழங்கிய சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ராசிபுரம் நகர தலைவர் வேல் (எ) வேல்முருகன், மற்றும் மாநில, மாவட்ட, கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.