முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலம்

முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Update: 2025-01-01 15:52 GMT
புத்தாண்டை முன்னிட்டு தசரா புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தசரா புகழ்பெற்ற குலசேகன்பட்டிணம் திருக்கோவிலில் இன்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதனையொட்டி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உலக நன்மை வேண்டி ஸ்ரீ காமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர் சார்பில் 1008 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து 1008 பால்குடம் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் கரகாட்டம், கோலாட்டம், பரமசிவன் பார்வதி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து சிவதாண்ட நாட்டியம் அணிந்தடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.

Similar News