காமராஜன் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகழ் வணக்கம்:

நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்துநிலையத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2025-07-15 05:57 GMT
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக காமராஜன் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகழ் வணக்கம்: கர்மவீரர் காமராஜரின் 122- ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்துநிலையத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வானது கட்சியின் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களான தங்க. இரத்தினவேல், கீர்த்திவாசன், செல்லம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களான அரவிந்த், சிவா ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்வில் கட்சியின், மாநில, மண்டல, மாவட்ட, பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Similar News