சேலத்தில் 1,300 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள்

அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்;

Update: 2025-07-29 04:12 GMT
சேலம் பிளாட்டினம் அரிமா சங்கம் சார்பில் செவ்வாய்பேட்டை புனித பத்ரீசியார் பெண்கள் தொடக்கப்பள்ளியில் 1,300 மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு மற்றும் தூய்மை பணியாளர் 100 பேருக்கு வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பெர்சி அனைவரையும் வரவேற்று பேசினார். தி.மு.க. மாநகர செயலாளர் ரகுபதி, பிளாட்டினம் அரிமா சங்க முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் 28-வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கும் நல உதவிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் நகர அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் சங்க தலைவர் எஸ்.என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தூதர் மகேஸ்வரன், நிர்வாகிகள் தேவகிருஷ்ணன், புகழேந்திரன், நந்திலால் மணிகண்டன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News