திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 15 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 15 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 15 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேய குப்தா போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற பல்வேறு உத்திகளை கையாண்டு முற்றிலுமாக போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைக்களை மேற்கொண்டு தனித்தனி குழுவாக அமைக்கப்பட்டு வாணியம்பாடி பகுதியிலுள்ள ஆந்திரா தமிழ் நாடு எல்லை பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர படுத்தி வருகின்றனர் இந்நிலையில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள வெங்கடேசன் என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட 9 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் பின்னர் வாணியம்பாடி பகுதியில் கிராமிய எல்லைக்கு உட்பட்ட செட்டியப்பணுர் பகுதியில் விஜயா என்பவரின் கடையில் 6 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்தனர் போதை பொருட்கள் கடத்தல்,விற்பனை குறித்துதகவல் தெரிவிக்க 9159959919 என்ற தொலை பேசி எண்ணில் தெரிவித்து போதை பொருட்கள் இல்லாத திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் தகவல் கொடுப்போரின் விவரம் ரகுசியம் பாதுகாக்கப்படும் மேலும் போதை பொருட்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்