ராணிப்பேட்டையில் 150 டயர்கள் தீயில் எரிந்தது

ராணிப்பேட்டையில் 150 டயர்கள் தீயில் எரிந்தது;

Update: 2025-03-27 15:16 GMT
நம்பரையில், ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் மறு உபயோகத்திற்காக 150 டயர்களை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில், பக்கத்து நிலத்துக்காரர் பஞ்சாட்சரம் என்பவர் தனது நிலத்தை சீர் செய்யும் பொருட்டு இன்று அங்கிருந்த முட்புதருக்கு தீ வைத்துள்ளார். அப்போது, அதிலிருந்து பரவி வந்த தீப்பொறி டயர்கள் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. ஆற்காடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Similar News