கந்தர்வகோட்டை நத்தமாடிப்பட்டி, தெற்கு உடையார் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று காலை 11 மணிக்கு அங்குள்ள கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி பலியானார். பின்னர் சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.