தந்தை, மகன்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!

கைது செய்திகள்;

Update: 2025-04-04 07:40 GMT
தந்தை, மகன்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!
  • whatsapp icon
ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாடிமுத்து மகன் அஜித்குமார் (23). இவர், ஆலங்குடி பழைய கோர்ட் முக்கம் கலைஞர் காலனி பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அஜித்குமார், அவரது சகோதரர் பிரசாந்த்(27), தந்தை நாடிமுத்து(50) ஆகியோரை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகு றித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்ப திந்து சதீஷ்(32), திருவப்பூர் பகுதியை சேர்ந்த சிவா (33) ஆகியோரை கைது செய்தனர் மேலும், தலைமறைவாக உள்ள மணியை தேடிவருகின்றனர்.

Similar News