நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காலில் கம்பியுடன் சுற்றித்திரிந்த காட்டெருமையின் காலில் இருந்து கம்பியினை அகற்றிய வனத்துறையினர்.
மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு மாடு;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காலில் கம்பியுடன் சுற்றித்திரிந்த காட்டெருமையின் காலில் இருந்து கம்பியினை வனத்துறையினர்....... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது சின்ன கரும்பாலம் இப்பகுதியில் காட்டெருமை ஒன்று பின்னங்காலில் கம்பி சிக்கியவாறு சுற்றி திரிவதாக உள்ளூர் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி குன்னூர் வனச்சரகர் அறிவுறுத்தலின் படி முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் வரவழைக்கப்பட்டு காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி காலில் இருந்த கம்பியை குன்னூர் வனத்துறையினர் அகற்றினர் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு காட்டு எருமையைஅடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர்.