சேலம் மாவட்டம் தாரமங்கலம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சரண்குமார் (வயது27), சண்முகராஜ்(29). கடந்த 2020-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தாரமங்கலம் போலீசார் அவர்களை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் பின்னர் இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் மாவட்டம் பிச்சாம்பாளையம் பகுதியில் தலைமறைவாக இருந்த சரண்குமார், சண்முகராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.