நாமக்கல்லில் நெகிழி ஒழிப்பு மற்றும் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் விதமாக சிலம்பக்கலை விழிப்புணர்வு நிகழ்ச்சி -2025 நடைபெற்றது.!
தமிழ்நாடு அரசு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் சிலம்ப பயிற்சி அளிக்க வருடத்திற்கு 3 மாதம் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குவதாகவும் அதனை நிரந்தர வேலை வாய்ப்பாக அளிக்க வேண்டும் சிலம்ப ஆசான்கள் அரசுக்கு வேண்டுகோள்!
நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் பங்கேற்ற புலி ஆட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது. மேலும் புலி ஆட்டம், மான் கொம்பு, சுருள் ஜோடி வரிசை, சிறுகுச்சி சண்டை, வாள் சண்டை ஆகிய சிலம்ப நிகழ்ச்சிகளில் வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாவட்டத்தில் 37 சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப பயிற்றுநர்கள் இதில் கலந்துகொண்டனர். சிலம்ப விளையாட்டில் பங்கேற்ற மூத்த ஆசான்கள் மற்றும் சிலம்ப வீரர்களுக்கு நாமக்கல் காவல் ஆய்வாளர் கபிலன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். முன்னதாக தலைமை உரையாற்றிப் பேசிய பசுமை நாமக்கல் செயலாளர்/நேரு யுவ கேந்ரா மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் பசுமை மா.தில்லை சிவக்குமார்..... இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றும் அதற்கு சிலம்ப கலையை கற்றுக் கொண்ட வீரர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இதன்மூலம் பாரம்பரிய சிலம்பக்கலை மேலும் வளர்ச்சி பெற வேண்டும் தெரிவித்தார்.நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன் பேசுகையில் ..... நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்றும் பாரம்பரிய கலையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் தமிழ்நாடு அரசு, 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் சிலம்ப பயிற்சி அளிக்க வருடத்திற்கு 3 மாதம் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குவதாகவும் அதனை நிரந்தர வேலை வாய்ப்பாக அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய நாமக்கல் சர்வம் அறக்கட்டளை ரம்யா.... சிலம்ப கலையை அனைவரும் கற்றுக்கொண்டு ஆரோக்கியமாக வாழலாம் அதே நேரத்தில் நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை அனைவரும் உருவாக்குவதற்கு இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரிதும் உறுதுணையாக உள்ளன என்றும் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் இராஜேந்திர குமார் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில், செயல் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் மாரிமுத்து, பொருளாளர் ஶ்ரீனிவாசன், சிலம்ப ஆசான்கள் சிலம்ப வீரர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.