தஞ்சாவூரில் டிச.24 கோட்ட அளவிலான விவ சாயிகள் குறைதீர் கூட்டம்

அரசு செய்திகள்

Update: 2024-12-21 14:06 GMT
தஞ்சாவூர் கோட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.12:24 செவ்வாய்கிழமை காலைம 10.00 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது எனவே,தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டார விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறி பயன்பெறும்படி வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.

Similar News