ஜெயங்கொண்டம் பகுதியில் மக்களுடன் முதல்வர் 3 ஆம் கட்ட சிறப்பு முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜெயங்கொண்டம் பகுதியில் மக்களுடன் முதல்வர் 3 ஆம் கட்ட சிறப்பு முகாம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை மின்சார துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.;

Update: 2025-05-16 09:52 GMT
அரியலூர், மே.16- ஜெயங்கொண்டம் ஒன்றியம், தண்டலை ஊராட்சியில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்,மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா வரவேற்புரையில்,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பொ.இரத்தினசாமி தலைமையில், எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முகாமினை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத், ஒன்றிய பொறுப்பாளர்கள் தன.சேகர் (ஜெயங்கொண்டம் மேற்கு),இரா.மணிமாறன் (ஜெயங்கொண்டம் மத்தியம்) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Similar News