சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருபவர் அருள்மொழிவர்மன். இவர் கன்னங்குறிச்சி போலீசில் சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போதை மாத்திரை விற்பனை செய்ததாக பள்ளப்பட்டியை சேர்ந்த அரிகரன் (வயது 26), பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் (33), ஜாகீர் அம்மாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.