அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 31.01.2025 வரை கால நீட்டிப்பு
ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் காலநீட்டிப்பு செய்து அரசாணை எண்.76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ(3)) துறை நாள்.14.06.218-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண்.122/நவ4(1)/2024, நாள்.25.06.2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெரம்பலூர் மாவட்ட மக்கள் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்