பூங்குளத்தில் 34 ஏக்கர் நிலங்களை விளைநிலங்களாக மாற்றிய விவசாயிகள்,

பூங்குளத்தில் 20 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக இருந்த 34 ஏக்கர் நிலங்களை விளைநிலங்களாக மாற்றிய விவசாயிகள்,

Update: 2024-09-26 10:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளத்தில் 20 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக இருந்த 34 ஏக்கர் நிலங்களை விளைநிலங்களாக மாற்றிய விவசாயிகள், கூலி வேலைக்கு சென்ற நிலத்தின் உரிமையாளர்கள், தற்போது கண்ணியமான பொருளாதார நிலையை எட்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக தரிசு நிலங்களாக இருந்த நிலத்தை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, தரிசு நிலங்களாக இருந்த 34 ஏக்கர் நிலத்தை, விளைநிலங்களாக மாற்றியமைக்கத்து, விவசாயம் செய்து அறுவடைக்கு தயாராக இருந்த வேர்கடலை, பயிர்களை, செய்தியாளர்கள் பயணம் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்க்கொண்டர்.. அதனை தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள், மற்றும் இடுபொருட்களை ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் தர்ப்பகராஜ் கூறியதாவது.. செய்தியாளர்கள் பயணம் திட்டத்தின் கீழ் பூங்குளம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்து வருகின்றோம், இந்த திட்டத்தின் நோக்கம் , தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக சீரமைத்து பயன்படுத்தும் நோக்கில் உருவாக்குவது, மேலும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற தேவைப்படும், ஆழ்துளை கிணறு, உள்ளிட்ட நீர்பாசன வசதி, மின்சார வசதி, சொட்டு நீர் பாசட வசதி, ஏற்படுத்தி தருவது, அதை தவிர மர விதைகள், உரங்கள், உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கி, இந்த தரிசு நிலத்தை விவசாய நிலங்களாக, மாற்றுவது தான் இந்த திட்டத்தின் செயல்பாடுகள், இந்த திட்டத்தின் கீழ்பூங்குளம் கிராமத்தில் 25 சிறுகுறு விவாசயிகள், இணைந்து ஒரு குழுவாக உருவாகி, 34 ஏக்கர் தரிசு நிலத்தை, விளைநிலங்களாக மாற்றி தற்போது முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர், இந்த திட்டம் மக்களுக்கு, சென்றடைகின்றதா என்பதை அறிய செய்தியாளர் பயணம் தற்போது மேற்க்கொள்ளப்பட்டது என தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் இங்கு செயல்படுவதற்கு முன்பு, நிலத்தின் உரிமையாளர்கள், மற்ற நிலங்களுக்கு கூலி ஆட்களாக சென்றுள்ளனர், ஆனால் இந்த திட்டத்திற்க பிறகு, நிலத்தின் உரிமையாளர்கள் கண்ணியமான பொருளாதார நிலையை எட்டியிருக்கிறார்கள், இது தான் இந்த திட்டத்தின் வெற்றி.. இந்த திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என கேட்டுக்கொண்டார் மேலும் இந்த திட்டத்தின் கீழ் , 20 வருடம் தரிசாக இருந்த நிலம், இந்த திட்டத்தின் கீழ் விளைநிலங்களாக மாறி, விவசாயிகளின் வாழ்க்கை மாற்றியுள்ளது, மேலும் இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்த 20 குழுக்கள் உருவாக்கப்பட்டு, 222 சிறு குறு விவசாயிகள், 246 ஏக்கர் நிலங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.. மேலும் இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..

Similar News