உடுமலை பஞ்சலிங்க அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை
கோவில் நிர்வாக ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவி யின் நீர்ப்பிடிப்பு பகுதியில் என குருமலை குழிப்பட்டி ஜல்லி முத்தான்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் 4வது நாளாக சுற்றுலாப் பெண்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்