குரூப் - 4 போட்டித் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள்

குரூப் - 4 போட்டித் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள்

Update: 2025-01-01 14:58 GMT
செங்கல்பட்டு, குரூப் - 4 போட்டித் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, குரூப் -4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இப்போட்டித் தேர்வுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044- 27426020-9486870577-6383460933 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News