போச்சம்பள்ளி அருகே வாட்ஸ் அப்’-ல் பட்டாக்கத்தியுடன் மிரட்டல் விடுத்த 4 பேருக்கு காப்பு.

போச்சம்பள்ளி அருகே வாட்ஸ் அப்’-ல் பட்டாக்கத்தியுடன் மிரட்டல் விடுத்த 4 பேருக்கு காப்பு.

Update: 2025-01-22 00:12 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூரை அடுத்த பட்டகப்பட்டியை சேர்ந்த நான்கு பேர் வலைத்தளங்களில் ஆபாச வார்த்தைகளில் பேசியும், பட்டாக்கத்தி, சூரிக்கத்திகளை கொண்டு கொலை மிரட்டல் விடுக்கும் வார்த்தைகளை' ஸ்டேட்டஸ்' ஆக வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காட்டாகரம் கிராம நிர்வாக அலுவலர் லெனின் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசு(32) ஜனா (22) நவீன்(19) மாதேஷ்(32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, சூரிக்கத்தி, செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தலைமறைவான வானு என்கிற வெங்கடேசனை போலீசார் தேடி வருகிறார்கள்

Similar News