திண்டுக்கல்லில் விதவை பெண்ணுக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி - ஒருவர் கைது

Dindigul;

Update: 2026-01-12 13:05 GMT
திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த செந்தில் மனைவி சாந்தி(37) இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் தேனி, பின்னதேவன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார்(எ) பொன்ஜெயகாளை என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக சாந்தி மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற தடுப்பு DSP.குமரேசன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார்(எ) பொன்ஜெயகாளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News