சரக்கு வாகனம் - வேன் மோதல் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயம்!

விபத்து செய்திகள்;

Update: 2025-04-04 07:42 GMT
சரக்கு வாகனம் - வேன் மோதல் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயம்!
  • whatsapp icon
விராலிமலை: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்த கம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி(40). இவர் தனக்கு சொந்தமான சுற்றுலா வேனில் அதே பகுதியை சேர்ந்த 10 பேரை அழைத்துக்கொண்டு ராமேஸ்வ ரம் கோயிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் நள் ளிரவு திருச்சிபுதுக்கோட்டை சாலையில் தஞ்சாவூர் ரிங் ரோடு சந்திப்பு அருகே வேன் சென்றபோது, பஞ்சப்பூர் ரிங் ரோடு வழியாக தஞ்சாவூருக்கு செல் வதற்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகு தியை சேர்ந்த ராஜேஸ்வரன்(36) என்பவர் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த மதுராந் தகத்தை சேர்ந்த விஜயலதா(50), மகேஸ்வரி(46), முனுசுப்பன் (70), உஷா(50), ருக்மணி (62), கஸ்தூரி (70) ஆகிய 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்ததும் மாத்துார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Similar News