கருங்குழியில் சாணி திரைப்பட பூஜை பள்ளி மாணவிகளுடன் கொண்டாடிய படக் குழுவினர்.
கருங்குழியில் சாணி திரைப்பட பூஜை பள்ளி மாணவிகளுடன் எளிமையான முறையில் கொண்டாடிய படக் குழுவினர்.;
கருங்குழியில் சாணி திரைப்பட பூஜை பள்ளி மாணவிகளுடன் எளிமையான முறையில் கொண்டாடிய படக் குழுவினர். செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழியில் உள்ள. சி எஸ் ஐ நடுநிலைப் பள்ளியில் சாணி திரைப்பட பூஜை நடைபெற்றது இதில் படக்குழுவினர் அம்பேத்கர் காமராஜர் அப்துல் கலாம்,தந்தை பெரியார்,டாக்டர் முத்துலட்சுமி,உருவ படங்களை வைத்து வழிபட்டு கொண்டு அந்தப் பள்ளியில் பயின்ற ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு நோட்டு பேனா புத்தகங்கள் மற்றும் பேக் போன்ற படிப்பிற்கு தேவையான பொருட்களை சாணி படத்தின் இயக்குனர் மோகன்ராஜ் சாணி படத்தின் கதாநாயகன் மருதுபாண்டியன் மற்றும் படக்குழுவினர்கள் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்கள் மேலும் பட குழுவினர்கள் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சாணி பட பூஜை நிகழ்ச்சிக்கு வந்த நபர்கள் படத்தின் இயக்குனர் மோகன்ராஜ்க்கு நினைவுப்பரிசு வழங்கி சால்வை அணிவித்து படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.