நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு வார்லி ஓவிய பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு வார்லி ஓவிய பயிற்சி;

Update: 2025-12-13 14:58 GMT
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வார்லி ஓவிய பயிற்சி முகாம் ராசிபுரம் ரோட்டரி ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக ராசிபுரம் ரோட்டரி சங்கப் பொருளாளர் ஏ.ஜி.ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மு.செல்வம் தலைமை வகித்துப் பேசினார். இம்முகாமில் பேசிய அவர், பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வார்லி ஓவியங்களில் வடிவியல் வடிவங்களான வட்டம் , முக்கோணம் , சதுரம் போன்றவைகள், இயற்கை வடிவங்களான சூரியன், சந்திரன் போன்றவற்றை குறிப்பிடவும், முக்கோணம் மரங்கள், மலைகள் , மனித உருவத்தை குறிப்பிடுவதற்கும், சதுரம் நிலங்களை குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்றும் பள்ளியில் ஆசிரியர்கள் வார்லி ஓவியங்களை கற்பித்ததற்கு எளிதாக பயன்படுத்தலாம் என்றும் மொழி கற்றலில் வாலி ஓவியங்கள் மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவும் என்றும் கூறினார். கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் மகேந்திரன் உருவாக்கியுள்ள வார்லி ஓவிய நூலை, ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் கல்வி சேவை திட்ட இயக்குனர் டி.பி. வெங்கடாஜலபதி வெளியிட்டார். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து ஓவியங்களை வரையும் போது விரல்களில் ஏற்படும் நுண் இயக்கங்கள் மூளையில் நியூரான்கள் உருவாக வழி வகுக்கும் என்றும் கூறினார். ராசிபுரம் ரோட்டரி சங்க சேவை திட்ட தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் பேசுகையில், மகாராஷ்டிரா மாநிலம் வார்லி பழங்குடியின மக்களின் பாறை குகை ஓவியங்கள் பற்றி ஆசிரியர்களும், மாணவர்களும் கற்பித்தலிலும் கற்றலிலும் பங்கு பெறுவது என்பதும் ஒரு புதிய சோதனை முயற்சி என்றார். மேலும் புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஸ்ரீ வெங்கடேசன் பள்ளிக்கு கொண்டு செல்லப்படும் வார்லி கற்பித்தலிலும் கற்றலிலும் ஒரு புதிய கோணத்தை உருவாக்க வேண்டும் என்றார். விழாவில் மாவட்ட பள்ளிகளின் துணை ஆய்வாளர் கை.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுமதி நன்றி கூறினார்.

Similar News